| 245 |
: |
_ _ |a அருள்மிகு அருணஜடேசுவரர் கோயில் - |
| 246 |
: |
_ _ |a தாடகையீச்சுரம், தாலவனேஸ்வரர் கோயில், செஞ்சடையப்பர் திருக்கோயில் |
| 520 |
: |
_ _ |a தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இத்தலம் 50 வது தலம் ஆகும். திருஞானசம்பந்தர், அப்பர் இத்தலத்தைப் பாடியுள்ளனர். திருப்பனந்தாள் பழம்பெரும் பதி. திருப்பனந்தாளில் குமரகுருபரர் காசிமடத்தை நிறுவினார். திருப்பனந்தாள் மடம் சைவ சமய மடங்களுள் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். |
| 653 |
: |
_ _ |a கோயில், சைவம், திருப்பனந்தாள், செஞ்சடையப்பர், தாலவனேசுவரர், அருணஜடேசுவரர், சிவன் கோயில், தஞ்சாவூர், முற்காலச் சோழர், சோழர் கலைப்பாணி, தேவாரத் திருத்தலம், பாடல் பெற்ற தலம் |
| 700 |
: |
_ _ |a American Institute of Indian Studies |
| 710 |
: |
_ _ |a American Institute of Indian Studies |
| 905 |
: |
_ _ |a கி.பி.9-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர் |
| 909 |
: |
_ _ |a 1 |
| 910 |
: |
_ _ |a 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். |
| 914 |
: |
_ _ |a 11.09235054 |
| 915 |
: |
_ _ |a 79.45508061 |
| 916 |
: |
_ _ |a செஞ்சடையப்பர், தாலவனேஸ்வரர் |
| 918 |
: |
_ _ |a பெரிய நாயகி (பிரகந்நாயகி) |
| 922 |
: |
_ _ |a பனை மரம் |
| 923 |
: |
_ _ |a பிரம்ம தீர்த்தம் |
| 924 |
: |
_ _ |a காமிகாகமம் |
| 925 |
: |
_ _ |a ஆறுகால பூஜை. |
| 926 |
: |
_ _ |a சித்திரை திருக்கல்யாணம், ஆடிப்பூரம், நவராத்திரி, சிவராத்திரி |
| 930 |
: |
_ _ |a அசுரகுல மகளான தாடகை என்பவள் (ராமாயணத்தில் வரும் தாடகை அல்ல) தினமும் பூமாலை ஏந்தி திருப்பனந்தாள் மூலவர் செஞ்சடையப்பரை வணங்கி வருகிறாள். ஒரு நாள் அவள் பூமாலையுடன் இறைவனை வணங்க வரும்போது அவளுடைய மேலாடை நழுவுகிறது. ஆடையைச் சரி செய்ய பூமாலையைக் கீழே வைக்க வேண்டும் இல்லாவிடில் மேலாடை சரிந்து நழுவி அவள் பலர் முன்னிலையில் மானம் இழக்க நேரிடும். இந்த நிலையில் அவளின் இறை வழிபாட்டை மெச்சி இறைவன் அவள் தனக்கு எளிதாக மாலை அணிவிக்கும் வகையில் தலை தாழ்த்திக் கொடுக்கிறார். இப்படி தாடகையின் பக்தியை உலகறியச் செய்த செஞ்சடையப்பர் குடி கொண்டிருக்கும் இத்தலம் தாடகைஈச்சரம் என்றே அழைக்கப்படுகிறது. தாடகைக்காக தலை தாழ்த்திய பிறகு அரசன் முதலானோர் எவ்வளவோ முயன்றும் சிவபெருமானின் தலை நிமிரவில்லை. 63 நாயன்மார்களில் ஒருவரான குங்கிலியக் கலயர் வந்து இறைவன் சடைமுடிக்கும் தம் கழுத்திற்கும் கயிறு கட்டி இழுக்கிறார். இறைவனும் அவரின் தூய்மையான பக்திக்குக் கட்டுப்பட்டு தலை நிமிர்கிறார். குங்கிலியக் கலயரின் மகன் இறந்துவிட அந்த உடலை தகனம் செய்ய எடுத்துப் போகும் போது வழியில் உள்ள பிள்ளையார் வழி மறித்து நாக கன்னிகைத் தீர்த்தத்தில் தீர்த்தமாடி வீடு திரும்பச் சொல்கிறார். வீடு சென்ற பின் இறந்த மகன் உயிர் பெற்று எழுகிறான். இத்தகைய பெருமைகள் பெற்றது திருப்பனந்தாள் சைவத் திருத்தலம். |
| 932 |
: |
_ _ |a மேற்கு நோக்கி உள்ள செஞ்சடையப்பர் கோயிலின் வாயிலில் நீண்டுயர்ந்த கோபுரம் உள்ளது. உள்ளே நுழைந்ததும் 16 கால் மண்டபம் இருக்கிறது. இம்மண்டபத்தின் கீழ்ப்புறம் நாககன்னிகை தீர்த்தம் இருக்கிறது. கோயிலின் வெளிச்சுற்றின் கீழ்ப் பக்கத்தில் தலமரமாக பனைமரமும் அதன் அருகில் தாடகை வழிபட்ட சிவலிங்கம் வைக்கப்பட்டுள்ளது. மூலவர் செஞ்சடையப்பர் திருமுன் (சன்னிதி) மேற்கு நோக்கி உள்ளது. இதற்கு வடக்கில் மேற்கு நோக்கிய பெரியநாயகி (பிரஹந்நாயகி) யின் திருமுன் இருக்கிறது. |
| 933 |
: |
_ _ |a இந்துசமய அறநிலையத்துறை |
| 934 |
: |
_ _ |a திருமங்கலக்குடி, ஆடுதுறை, தென்குரங்காடு துறை |
| 935 |
: |
_ _ |a கும்பகோணம் - அணைக்கரை வழித்தடத்தில் கும்பகோணத்தில் இருந்து 18 கி.மி. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணம் - மயிலாடுதுறை சாலை வழியிலுள்ள ஆடுதுறை அடைந்து அங்கிருந்தும் திருப்பனந்தாள் செல்ல சாலை வசதி உள்ளது. |
| 936 |
: |
_ _ |a காலை 7.00 -12.00 முதல் மாலை 4.00-8.30 வரை |
| 937 |
: |
_ _ |a திருப்பனந்தாள் |
| 938 |
: |
_ _ |a கும்பகோணம், ஆடுதுறை |
| 939 |
: |
_ _ |a திருச்சி |
| 940 |
: |
_ _ |a கும்பகோணம் விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_000163 |
| barcode |
: |
TVA_TEM_000163 |
| book category |
: |
சைவம் |
| cover images TVA_TEM_000163/TVA_TEM_000163_திருப்பனந்தாள்_அருணஜடேசுவரர்-கோயில்-0001.jpg |
: |
|
| Primary File |
: |
TVA_TEM_000163/TVA_TEM_000163_திருப்பனந்தாள்_அருணஜடேசுவரர்-கோயில்-0001.jpg
TVA_TEM_000163/TVA_TEM_000163_திருப்பனந்தாள்_அருணஜடேசுவரர்-கோயில்-0002.jpg
TVA_TEM_000163/TVA_TEM_000163_திருப்பனந்தாள்_அருணஜடேசுவரர்-கோயில்-0003.jpg
TVA_TEM_000163/TVA_TEM_000163_திருப்பனந்தாள்_அருணஜடேசுவரர்-கோயில்-0004.jpg
TVA_TEM_000163/TVA_TEM_000163_திருப்பனந்தாள்_அருணஜடேசுவரர்-கோயில்-0005.jpg
TVA_TEM_000163/TVA_TEM_000163_திருப்பனந்தாள்_அருணஜடேசுவரர்-கோயில்-0006.jpg
TVA_TEM_000163/TVA_TEM_000163_திருப்பனந்தாள்_அருணஜடேசுவரர்-கோயில்-0007.jpg
|